டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பாரா?

132 0

இலங்கையில் சீனா முன்னெடுக்கும் கொழும்புதுறைமுகநகர திட்டத்திற்கு  ஆதரவளித்த பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பாரா என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கையை சேர்ந்த அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதா  என்ற உடனடி தீர்மானத்தை பிரிட்டனின் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட்கமருன் எடுக்கவேண்டும் என எட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் சீனாவின் முதலீட்டில் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுக நகர திட்டத்தினை சர்வதேச அளவில் ஊக்குவிப்பதற்காக கமரூன் ஈடுபடுத்தப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

மனித உரிமை அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் இலங்கையின் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளான முன்னாள் இராணுவதளபதி சவேந்திரசில்வா மிகச்சமீபத்தில் ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக தடைகள் குறித்த இரண்டு ஆவணங்களை கையளித்துள்ளது.

இரண்டு ஆவணங்களும் டிசம்பர் 10 ம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்திற்கு முன்பாக முடிவிற்காக காத்திருக்கின்றன.

கடந்த வருடம் நவம்பரில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை தடுப்பது தொடர்பான உச்சிமாநாட்டில் மோதல் தொடர்பிலான பாலியல் வன்முறைகளுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான தடைகளிற்கு முன்னுரிமை அளிப்பேன் என பிரிட்டன் உறுதியளித்திருந்தது.

மிகமோசமான தடுப்பு முகாமான ஜோசப் முகாமிற்கு பொறுப்பாகயிருந்தமைக்காக சவேந்திர சில்வாவிற்கு எதிராகமக்னிட்ஸ்கி தடைகளை  ஏன் விதிக்கவேண்டும் என்பதற்கான வலுவான ஆதாரங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் பாலியல்வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் எனசர்வதே  உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஐநா ஏற்படுத்திய விசாரணை குழுவில் ஜஸ்மின் சூக்கா இடம்பெற்றிருந்தார்.

பாலியல் வன்முறை சித்;திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பல தமிழர்கள் தற்போது பிரிட்டனில் புகலிடம் பெற்றுள்ளனர்.பாலியல் வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவது அதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்வது குறித்து கடந்த வருடம் பிஎஸ்விஐ முயற்சியில் பிரிட்டன் வாக்குறுதியளித்துள்ளது காரணமாக இலங்கையில் பாலியல் வன்முறை சித்திரவதைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.