பாதாள உலகத் தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி கதிர்காமம் ருஹுணு மகா விகாரைக்கு வழங்கிய 38 பவுண் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விகாரையின் பிரதான பூசகரையும் மற்றொரு பூசகரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ருஹுணு கதிர்காம விகாரையின் பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகரவினால் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதனை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளித்தார்.
அதன்படி, அதன் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவின் கீழ், பிரிவு இலக்கம் 1 நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நிஷாந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே சட்டமா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.