வழக்கு ஒன்று தொடர்பில் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் தர்ஷிகா விமலசிறிக்கு கொழும்பு இல.05 மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தற்போதைய நீதிவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றும் கோசல சேனாதீரவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
வழக்கு ஒன்றின் அடையாள அணிவகுப்பு தொடர்பான குறிப்புகள் தொடர்பான சாட்சியங்களைப் பெறுவதற்காக முன்னாள் நீதிவானுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.