ஹங்வெல்ல களுஹக்கல கிராஇம்புலவில் அமைந்துள்ள பிக்குகள் நிலையமொன்றில் 170,000 மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு தங்கியுள்ள பிக்குகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என அந்த நிலையத்தைச் சேர்ந்த மொதரவனே அமில சிறி தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த பிக்குகள் நிலையத்தில் நோய்வாய்ப்பட்ட 68 பிக்குகள் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதக் மின் கட்டணமாக அதிகளவில் கட்டணம் சேர்த்துள்ளதாகவும் பங்களிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால் இந்த நிலையத்துக்கு நன்கொடை மற்றும் நிதியுதவி கிடைக்காமையே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளா்ர.
இதேவேளையில், சூரிய மின் உற்பத்தி உபகரணங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதனால் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.