நட்சத்திர உணவகமாக மாற்றப்படும் சிறைச்சாலை

80 0

போகம்பர சிறைச்சாலை சர்வதேச ஐந்து நட்சத்திர உணவகமாக நிறுவனமாக மாற்றப்படும் எனவும், இதற்காக உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

யால ஹில்டன் உணவகத்தை கட்டிய மெல்வா குழுவினால் கட்டப்படும் இது கட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள மூன்று மாடி போகம்பரா சிறைச்சாலையானது நாட்டின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகும்.இது பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை ஒரே அடித்தளத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடமாகும்.

138 ஆண்டுகள் செயல்பட்ட சிறை 2014ல் மூடப்பட்டது.

நட்சத்திர உணவகமாக மாற்றப்படும் சிறைச்சாலை | Bogambara Prison Into Five Star Hotel

இவ்வாறான சின்னச் சின்ன சொத்துக்களுக்கு உலகளாவிய ரீதியில் தேவை காணப்படுவதாகவும், முதலீட்டாளர்கள் அதில் ஒன்றாக போகம்பர சிறைச்சாலையை அடையாளப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.