பாகிஸ்தான் பஹவல்பூர் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றின் புலியின் கூட்டிலிருந்து புதன்கிழமை (06) ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மிருகக்காட்சி சாலையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் புலி கடித்துக்கொண்டிருந்த காலணியொன்றை கண்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் கூட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் புலியின் கூட்டிற்குள் எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்படவில்லை.
இவர் உயிரிழந்து பல மணிநேரமாக கூட்டிற்குள் கிடந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.