எந்தத் தேர்தலுக்கும் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம்

74 0

எந்த தேர்தலுக்கும்  கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் நாட்டில் ஒரு வீத வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது. அந்தக் கட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் இதுவரையில் முன்னேற்றம் அடையவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எந்த தேர்தலுக்கும்  கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம். உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இன்னமும் நாட்டில் ஒரு வீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளது. வீழ்ச்சியடைந்த ஐக்கிய தேசியக்கட்சி இதுவரையில் முன்னேற்றம் அடையவில்லை.

நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பனவும் சரிவையே சந்தித்துள்ளன.

இதேவேளை பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த போதிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது தற்போது மெதுவாக முன்னோக்கி  வரும் ஒரு கட்சியாக காணப்படுகிறது.

69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சியாக காணப்பட்ட போதிலும் எதிர்காலத்தில் குறைந்த பட்சம் அதில் பாதியையாவது பெற்றுக்கொள்ளும். ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் அந்த கட்சியினால் ஒரு வீத வாக்குகளையே பெற முடியும்