சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட உடன் எவ்வாறு நோயாளிகளாக மாறுகின்றனர்

407 0

d1404c0d1d5d55523575d8d6971dc1bc_Lசிறையில் இருக்கும் போது நோயாளிகளாகும் சிலர் பிணையல் விடுதலை செய்யும் போது எழுந்து நடந்து செல்லும் அளவிற்கு சுகதேகியாகின்றனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.ஒரே இரவில் சுகமாகி, எதிர்ப்பு பாத யாத்திரையிலும் பங்கேற்கக்கூடிய உடல் திடகாத்திரம் இவ்வாறான சந்தேக நபர்களுக்கு கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் பாராளுன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட உடன் எவ்வாறு நோயாளிகளாக மாறுகின்றனர் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு பதிலளி;த்த போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.