தற்போதைய தமிழக அரசியல்: மக்களின் எண்ணம் என்ன? – தந்தி டி.வி.யின் கருத்து கணிப்பு முடிவு

509 0

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தந்தி டி.வி. நடத்திய கருத்துகணிப்பில் மக்கள் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அவரது மரணத்தை தொடர்ந்து, அரசியலில் சற்றும் எதிர்பாராத வகையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. இந்த மாற்றங்கள் தொடர்பாக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது.

இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தந்தி டி.வி. குழு களம் இறங்கியது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தற்போது வரையிலான அரசியல் நிலவரம் குறித்து மக்களிடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கருத்துக்கணிப்பில் தொகுதிக்கு 75 பேர் வீதம் 234 தொகுதிகளில் மொத்தம் 17 ஆயிரத்து 550 பேரிடம் பதில்கள் பெறப்பட்டன. அதன் பரபரப்பான முடிவுகள் வருமாறு:-

* சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியது பற்றி?


வரவேற்கத் தகுந்த நடவடிக்கை – 84 சதவீதம்

கட்சிக்கு செய்த துரோகம் – 7 சதவீதம்

கருத்து இல்லை – 9 சதவீதம்

* இனி அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பிளவுகளால் பத்தோடு பதினொன்றாகி விடும் – 46 சதவீதம்

இதெல்லாம் கடந்து போகும், தொடர்ந்து பலத்துடன் திகழும் – 44 சதவீதம்

கருத்து இல்லை – 10 சதவீதம்

* தற்போதைய அரசியல் குழப்பம் எந்தக்கட்சிக்கு பலனைத் தரும்?

தி.மு.க. – 61 சதவீதம்

ஓ.பி.எஸ். அணி – 26 சதவீதம்

பா.ஜனதா – 9 சதவீதம்

மற்ற கட்சிகள் – 4 சதவீதம்

* தற்போதைய அரசியல் சூழலில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?

சட்டசபைக்கு புதிதாக தேர்தல் வேண்டும் – 59 சதவீதம்

மீதி 4 ஆண்டுகள் எந்தக் கட்சியும் ஆளட்டும் – 31 சதவீதம்

அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் வரை ஜனாதிபதி ஆட்சி – 10 சதவீதம்

* நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் நடந்த கலாட்டாவில் தவறு யார் பக்கம்?

ஆளுங்கட்சி – 35 சதவீதம்

சபாநாயகர் – 33 சதவீதம்

எதிர்க்கட்சி – 32 சதவீதம்

* ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் முடிவு மாறி இருக்குமா?

ஆமாம் – 61 சதவீதம்

இல்லை – 33 சதவீதம்

கருத்து இல்லை – 6 சதவீதம்

* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா மீதான பார்வையில் மாற்றமா?

இல்லை – 52 சதவீதம்

ஆமாம் – 43 சதவீதம்

கருத்து இல்லை – 5 சதவீதம்

* சிறையில் உள்ள சசிகலா தமிழக அரசை இப்போதும் இயக்குகிறாரா?


ஆமாம் – 89 சதவீதம்

இல்லை – 6 சதவீதம்

கருத்து இல்லை – 5 சதவீதம்

இவ்வாறு தந்தி டி.வி. கருத்துகணிப்பில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.