சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்ய துருக்கி தீர்மானம்

280 0

சிரியாவில் மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்துக் கொள்ளவிருப்பதாக, துருக்கி அறிவித்துள்ளது.

ஆறு மாதங்களாக வடக்கு சிரியாவில் துருக்கிப் படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுவதாக, துருக்கியின் ஜனாதிபதி தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதனை அந்த நாட்டின் பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்காக துருக்கிய படையினர் அங்கு இதுநாள்வரையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், எதிர்காலத்தில் மீண்டும் சிரியாவில் புதிய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று துருக்கியின் பிரதமர் கூறியுள்ளார்.