கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மகள் கலால் திணைக்களத்தில் பணிபுரியவில்லையாம்

96 0

மாத்தறை – கொடவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (29) சட்டவிரோத மதுபான கடத்தலில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மகள் கலால் திணைக்களத்தில் பணிபுரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் மகள் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பொது நிர்வாக அமைச்சகத்தின் ஒன்றிணைந்த சேவையை சேர்ந்த அலுவலக பணி உதவியாளர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் தம்பதிகளின் மகள் பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே ஊடகங்களில் இவர் கலால் திணைக்களத்தில் பணிபுரிபவர் என்று வெளியாகிய தகவல் தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.