பின்லாந்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது . தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தும் , தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2023 இன் நிகழ்வுகள் பின்லாந்தில் மிகவும் சிறப்பாக எழுச்சிகரமாக நடைபெற்றது. மாவீரர்நாள் நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை லெப்டினன்ட் பெருமாளின் சகோதரி ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். தேசியத்தலைவரின் 2008 ஆம்ஆண்டு மாவீர்ர்நாள் உரையைத் தொடர்ந்து , தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத்தொடர்பகத்தின் கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள். பொதுமக்களிற்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு,துயிலுமில்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது. முதன்மைச்சுடரினை 2ம் லெப்டினன்ட் இளந்தென்றல்(ஈசன்) அவர்களின் தாயார் திருமதி கி,வள்ளிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க , அனைத்து உறவுகளும் மாவீரர்களிற்கு தீபம் ஏற்றியதோடு,மலர் வணக்கமும் செய்தனர். தொடர்ந்து மாவீரர் நினைவுகளைத் தாங்கிய கலைநிகழ்வுகள் இளையோர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலிக்க விடப்பட்டு தேசியக்கொடி கையேந்தலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.