மலையகத்தில் கல்வியை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

109 0

மலையக மக்களின் முன்னேற்றம் கல்வியிலேயே தங்கி இருக்கிறது. அதனால் மலையகத்தில் கல்வி அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன் தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சர் ஜீவன் மேற்கொண்டு வருகிறார் என மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலையக மக்களுககு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுககு தங்களுக்கான வீடுகளை கட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைகும், மலைகத்துக்கு ஒரு இலட்சத்தி 75ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் தேவைப்படுகின்றன. ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு ஆயிரம் வீடுகளையே கட்டுவார்கள்.

இவ்வாறு எமக்கு வழங்கும்போது எமது வீட்டுத்தேவையை பூர்த்தி செய்ய பல வருடகாலங்கள் செல்லும். அதனாலே முன்னாள் காணி அமைச்சர் பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணியை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதனுடன் இணைந்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் 10பேர்ச் காணியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த காணிகளை எமது மக்களுக்கு வழங்கினால் அவர்கள் தங்களுக்கு வசதி வாய்ப்பு ஏற்படும்போது கட்டிக்கொள்ளவும் முடியுமாகிறது.

அத்துடன் இந்திய அரசாங்கம் இதுவரை 14ஆயிரம் வீடுகளை வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்தினால் கிடைக்கும் வீடுகள் மற்றும் வேறு முதவிகள் மூலம் கிடைக்கும் வீடுகள் என கிடைக்கும் போது அதனையும் படிப்படியாக எமது மக்களுக்கு பெற்றுக்கொக்க முடியும்.

அத்துடன் பெருந்தோட்ட கம்பனிளும் பெருந்தோட்ட மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தால் மாத்திரம் போதும் என்றே  செயற்படுகின்றனர். அரசாங்கமே பெருந்தோட்டத்தில் அனைத்து அவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான லசதிகளை செய்துகொடுத்து வருகிறது. அதனால் இந்த நிலைமை மாறவேண்டும். அதனால்தான் அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியும் கலந்துரையாடி இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு ஆரம்பமாக அவர்களுக்கு அந்த காணி உரிமையை வழங்க வேண்டும்.

அதனால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அந்த நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவே தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேநேரம் எமது மக்களின் முன்னேற்றம் கல்வியில் தான் இருக்கிறது. அதனால் மலையகத்தில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ள நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். குறை கூறிக்கொண்டிருப்பதால எதுவும் இடம்பெறப்போவதில்லை என்றார்.