சந்தேக நபரை துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

118 0
சந்தேக நபரை துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பொலிஸ் சார்ஜன்ட்டாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த வியாழக்கிழமை (23) ஜா-எல பகுதியில் கைவிலங்குடன் நீரோடையில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி, பின்னர் ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர் ஆவார்.