கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 அலுமினியக் கதவுகளை திருடிய இருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய கூலி வேலை செய்யும் நபர்களாவர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.