தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகாவாட் ஆக அதிகரிப்பு

128 0

தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின் உற்பத்தி செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்நிலையங்களை ஆர்வத்துடன் அமைத்து வருகின்றன.

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை, கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர்மின் நிலையம், தாவரக்கழிவு, சர்க்கரை ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் அதிக திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,649 மெகாவாட், மேற்கூரை மின் உற்பத்தி 449 மெகாவாட், விவசாய நிலங்களில் 65.86 மெகாவாட் என மொத்தமாக சூரியசக்தி மின் உற்பத்தி 7,163.86மெகாவாட்டாக உள்ளது. குறிப்பாக, கடந்த 4 மாதங்களில் 263 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான அதிக திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.