பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கித்துல் சீவல் தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த கோரிக்கைக்கு வனஜீவராசிகள் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் கித்துல் உற்பத்தி பொருட்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், கித்துல் உற்பத்திகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் மொத்தம் 30 ஆயிரம் கித்துல் மரங்கள் உள்ளன. அவற்றில் 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டில் கித்துல் கைத்தொழில் அபிவிருத்திக்காக நிதியமைச்சர் என்ற வகையில் இவ் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டுக்கு அதிக நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ் ஆண்டு கித்துல் கைத்தொழிலுக்கு 20 இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டிற்கு 2 கோடியே 40 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.