சென்னையில் 9 ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

96 0

போதைப் பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டியதாக சென்னையில் 9 காவல் ஆய்வாளர்கள், ஆவடியில் 2 உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்க, அதில்தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதில், சில காவல் ஆய்வாளர்கள் மெத்தனம் காட்டியதாகவும், சிலர் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் 9 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக செல்ல காவல் ஆணையர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் அனைவரும் வட சென்னை (சென்னை வடக்கு மண்டலம்) பகுதிக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் என கூறப்படுகிறது.

ஆவடி காவல் எல்லை: இதேபோல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு, வெள்ளவேடு, செவ்வாய்ப்பேட்டை, செங்குன்றம், மணலி, எண்ணூர் உள்ளிட்ட ஆவடிகாவல் ஆணையரக எல்லை பகுதிகளில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 150-க்கும்மேற்பட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், குட்கா, கூல்-லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 23 கடைகளில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. 113 கிலோ 850 கிராம் குட்கா,கூல்-லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிகளை மீறியவர்களுக்கு ரூ.1.07 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 23 கடைகளையும் பூட்டி விற்பனையை நிறுத்த உணவு பாதுகாப்பு அதி காரிகள் உத்தரவிட்டனர்.

வியாபாரிகளுடன் தொடர்பு: மேலும், இந்த சோதனையின்போது, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீஸார் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவ்வாறு வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் ஆவடி காவல் ஆணையர் சங்கரின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டிய லுக்கு அதிரடியாக மாற்றம் செய் யப்பட்டுள்ளனர் என ஆவடிகாவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.