வடக்கு கிழக்கில் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பு

256 0

மதிய நேரத்தில் மன்னாரின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையினை விட 2 செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வீழ்ச்சியடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 143 மில்லி மீற்றர் ஹம்பாந்தோட்டை மித்தெனிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக 33.8 செல்சியஸ் வெப்பநிலை புத்தளத்தில் பதிவாகியுள்ளளது.

குறைந்த பட்ச வெப்பநிலையாக 16.6 செல்சியஸ் நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.