காசாவில் உலக சுகாதாரஸ்தாபனத்தின் பெண் பணியாளர் இஸ்ரேலின் தாக்குதலில் குடும்பத்துடன் பலி

84 0

உலக சுகாதார பணியகம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் தனது பெண் பணியாளர் டிமா அப்துல்இலத்தீவ் முகமட் அல்ஹாஜ்; கொல்லப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.

காசா நகரிலிருந்து இடம்பெயர்ந்து காசாவின் தென்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தவேளை இடம்பெற்ற குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குண்டுவீச்சின் காரணமாக டிமாவும் கணவரும் ஆறுமாத குழந்தையும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

ஓக்டோபர் ஏழாம் திகதி முதல் ஐநாவும் மனிதாபிமான சமூகமும் பலரை இழந்துள்ளன இன்று எல்லைகள் அற்ற வைத்தியர்கள அமைப்பு இரண்டு மருத்துவர்களை இழந்துள்ளது  பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு 108 பேரை இழந்துள்ளது இவர்கள் வெறுமனே பணியாளர்கள் இல்லை ஏனையவர்களின் சிறந்த வாழ்க்கைக்காக பணியாற்றியவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

டிமாவின் மரணம் அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்கான மற்றுமொரு உதாரணம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் வெளியேற்றப்படும்போதும் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  உலக சுகாதார ஸ்தாபனம் தங்கள் கரங்களில் அதிகாரங்களை வைத்துள்ளவர்களை இந்த மோதலை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள் கேட்டுக்கொள்கின்றோம்எனவும் தெரிவித்துள்ளது.