இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்கள் விடுதலைசெய்யப்படுவார்கள்

86 0

50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் 150 பாலஸ்தீன பெண்கள் சிறுவர்களை விடுதலை செய்யும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பாலஸ்தீன உடன்படிக்கையின் கீழ் மனிதாபிமான உதவிகள் மருந்துகள் எரிபொருட்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகள் காசாவிற்குள் நுழையவுள்ளன என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

யுத்தஇடைநிறுத்த காலப்பகுதியில் காசாவில் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை எவரையும் கைதுசெய்யப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.