வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தி ஓமந்தைப் பகுதியில் பயணித்த போது வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாரவூர்தியை செலுத்திய போது அதே வழியில் வந்த இ.போ.சபை பேரூந்து கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து பாரவூத்தி வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இவ்விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.