முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,19.11.2023 இன்று மாலை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு -வள்ளிபுனம் பிரதேசத்தில் 60 மாவீரர்களின் பெற்றோர், பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.
முதலில் மாவீர்ர் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர் ஈகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று,பெற்றோர் சந்திப்புக்களோடு நிறைவுபெற்றது.
மாவீர்ர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு உலர்உணவுப்பொருட்கள் நோர்வே வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரது அகம்நிறைந்த வணக்கத்தோடும் உணர்வெழுச்சியோடும் மதிப்பளிப்பு நிறைவுபெற்றது.