மீகொட, கொம்பயாஹேனேயில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதாகக் கூறப்படும் இரு மாணவர்களை தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பயஹேன பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொடகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர்களுமான 16 மற்றும் 17 வயதுடைய இரு மாணவர்களே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டவர்களாவர்.
மீகொட பொலிஸ் நிலையத்தின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவொன்று கொம்பயஹேன பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்புக்கு சென்றது.
இந்தச சந்தர்ப்பத்தில், சந்தேகத்துக்கிடமான வகையில் இலக்கத் தகடு இன்றி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாகச் செல்வதைக் கண்டு, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்தி விசாரணை மேற்கொண்ட நிலையிலேயே இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.