உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான, உண்மையை கண்டறிவதற்கான முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாம் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களும் பரிசுத்த பாப்பரசரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கான நீதி உண்மையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாம் என பரிசுத்த பாப்பரசர் கேட்டுக்கொண்டார் கர்தினால் தெரிவித்துள்ளார்.