இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 196 இந்திய மீனவர்கள் 11 மாதங்களில் கைது!

69 0

இலங்கை கடல் எல்லைக்குள்  11 மாதங்களில்அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 196 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களிலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டதாக  கடற்படை  அறிவித்துள்ளது. 29 படகுகளையும் தாம் கைப்பற்றியதாக மேலும்  அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 22 மீனவர்கள்   நேற்று (18) பருத்தித்துறை   கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வந்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகமயிலிட்டி   கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.