திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழில் நடைபயணம் முன்னெடுப்பு

61 0

யாழ். திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி விழிப்புணர்வு நடைபயணத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையினால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.