மீன் பிடிக்க சென்று மாயமானவர்கள் மீட்பு

67 0

மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த படகில் இருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) மீன்பிடிக்கச் சென்ற குழுவினரின் படகு ஒன்று இன்று (19) அதிகாலை சுழலில் சிக்கி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் படகில் இருந்த நான்கு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாராவில் மற்றும் துடுவா பிரதேசங்களை சேர்ந்த சிலவரும் ஜப்பானிய பிரஜை ஒருவருமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 06 பேர் பயணித்துள்ளதுடன், முஹூதுகட்டுவவிற்கு அண்மித்த பகுதியில் படகு காணாமல் போயிருந்தது.