தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் நிலையில்

54 0

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கெபோய்கனே, பிங்கிரிய, சிலாபம் ரஸ்நாயக்கபுர, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறிதளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.