கிரிக்கெட் தடைக்கு காரணமான கடிதம்!

66 0

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கடிதத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இது நாட்டை காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் குறிப்பிட்டார்.