வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான நேற்று (18) சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்டே சூரசம்ஹாரம் ஆலயங்களில் நடைபெற்றது.
இதேவேளை, முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கடாய் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து சூரனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி கொடுத்துள்ளார்.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்துள்ளார்கள்.