பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் முகவர் அமைப்பு நடத்தும் அல்பகுரா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் வடபகுதியில் உள்ள ஜபாலியா அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலின் முடிவற்ற தாக்குதலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
எங்குபார்த்தாலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன காயமடைந்தவர்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காசாவின் வடபகுதியில் இடம்பெறும் தாக்குதல் காரணமாக பல பொதுமக்கள் ஐநாவின் அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மருத்துவ தேவைகள் உள்ள மக்கள் ஜபாலியா அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் அவர்களால் அங்கு வன்முறைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை,காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்கு செல்லுங்கள் என்ற செய்தியை இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.