ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் ஞாயிற்றுக்கிழமை (19) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள மு.காவின் தலைமையகமான தருசலாத்தில் இந்தக் கூட்டம் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டமானது, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிதன் பின்னர் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாக காணப்படுகின்றது.
அதேநேரம், இந்தக் கூட்டத்தின்போது தற்போது பாராளுமன்றில் இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.