தேர்தலை இலக்கு வைத்து பட்ஜெட் அல்ல இது!

50 0

அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் ஒரு தலைவருக்கு அடிமையாக இருந்து சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடக்கூடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இறுதியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இல்லையெனில் அக்குழுவினர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இன்று (18) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தேர்தலை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இது அல்ல என்பதை அனைவரும் தௌிவாக புரிந்துகொள்ள வேண்டும் எனவும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.