திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக தகறாறு ஏற்பட்டடுள்ளது. இதனால் கோபமடைந்த மனைவி துடுப்பாட்ட மட்டையினால் கணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த கணவன் தெபர ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.