களுத்துறை – பதுரலிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 6 வயது சிறுமி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த தனேஷி ஆருத்யா என்ற 6 வயது சிறுமி ஆவார்.
இவர் பெற்றோருடன் நேற்று பதுரலிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த போது நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் சிறுமி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.