இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவரை நியமிக்க பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி கே.டி.செனவிரத்னவை நியமிப்பதற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஆர்.பி. போகல்லாகமவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக டீ.டீ.எம்.எஸ்.பி. திசாநாயக்க, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவராக டபிள்யூ.கே.சி.வீரசுமனவை நியமிக்க உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.