ஆசிரியர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

87 0

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கிராந்துருகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 ,37 வயதுடையவர்கள் ஆவர்.

இவர்கள் பல்வேறு பிரதேசங்களில் தங்களை ஆசிரியர்கள் என கூறி பாடசாலை மாணவர்களின் பொற்றோர்களிடம் தொலைபேசி அழைப்பு மூலம் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி சிகிச்சைக்காக பணத்தை தமது வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கோரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சுமார் 25 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறான போலி தொலைபேசி அழைப்பு தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் இவ்வாறான அழைப்புகளில் சிக்கினால் உடனடியாக தகவல் வழங்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.