அல்ஸிபா மருத்துவமனைக்குள் சுரங்கப்பாதைகள்- இஸ்ரேல் வீடியோ வெளியீடு

138 0

அல்ஸிபா மருத்துவமனைக்குள்ளே உள்ளதாக தெரிவிக்கப்படும் சுரங்கப்பாதைகளை காண்பிக்கும் படங்களை  இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது.

அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் இது குறித்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அல்ஸிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதைக்கான நுழைவாயில் காணப்படுகின்றது.

காசாவின் அல்ரன்டிசி சிறுவர் மருத்துவமனைக்குள் சுரங்கப்பாதை  காணப்படும்  வீடியோக்களையும்  இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.