நுரைச்சோலையில் மின்பிறப்பாக்கி செயலிழப்பு

67 0

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் தற்போது செயலிழந்துள்ளன.