பணயக்கைதிகள் விடுதலை அடுத்த வாரமளவில் சாத்தியமாகலாம்

105 0

ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் சிலரை அடுத்தவாரமளவில் விடுதலை செய்யலாம்  என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

லெபானின் புலனாய்வுபிரிவின் முன்னாள் தலைவர் அபாஸ்இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.

சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால்பணயக்கைதிகள்  விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தன்னுடைய சில நிபந்தனைகளை வாபஸ்பெற்றால் அல்லது ஹமாசின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் சிறுவர்களை அந்த நாடு விடுதலை செய்தால் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும்  என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்