ஸ்ரீ சமந்தபத்ர தேரர் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்ட மகஓளஷத வைத்தியசாலை (Mahahoshadha Hospital) மற்றும் ஆரோக்கிய நிலையம் மக்கள் நலன் கருதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதனை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான வைபவம் நாளை சனிக்கிழமை (18) குருநாகல் உமாந்தவ மகா விகாரையில் நடைபெறவுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.