சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்!

75 0

சென்னையில் வியாபாரத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவரை கடத்திச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது தந்தையை கடத்திய சிலர் அவரை விடுவிப்பதற்காக 15 இலட்சம் இந்திய ரூபாவை கோரி அழைப்பொன்றை மேற்கொண்டதாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என தன்னை அடையாளப்படுத்திய பெண் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடத்தப்பட்ட வர்த்தகர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.