போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை வந்தடைந்ததன் பின்னர் 48 மணித்தியாலத்துக்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.