எங்களின் தொலைபேசிகள் பாதுகாப்பாகயில்லை நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாதநிலையில் உள்ளோம்

94 0

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த  சுயாதீன விசாரணைகளுக்கான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏபிசிக்கு கர்தினால் இதனை தெரிவித்துள்ளார்.

270பேருக்கும் என்ன நடந்தது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிவதற்காக சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களை கொடுப்பதற்கு அவுஸ்திரேலியாவும் உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பாரிய மனித உரிமை மீறலாக மனிதர்களின் கௌரவம் மீறப்பட்ட செயலாக அரசியல் சதி குறித்த சந்தேகம் உள்ள விடயமாக அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஏனைய அரசாங்கமும் கருதவேண்டும் என  கர்தினால் தெரிவித்துள்ளார்.

முக்கிய நபர்கள் அமைச்சர்கள் உளவுத்துறையில் உள்ளவர்கள் யுத்தகாலத்திலும்   அதன் பின்னரும் நிலவிய வன்முறை பாரிய குழப்பநிலை காணாமல்போதல்கள் படுகொலைகள் போன்வற்றுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கர்தினால் இதன் காரணமாகவே நாங்கள் சுயாதீனமான சுதந்திரமான அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படாத  சர்வதேச தராதரங்களை பின்பற்றுகின்ற விசாரணைகளை கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குகுதல் குறித்து கேள்வி எழுப்பியமைக்காக  சுரேஸ்சாலேயை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் எனது மதகுருஒருவருக்கு  எதிராக வழக்குதாக்கல்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கர்தினல் மல்கம் ரஞ்சித் இந்த தாக்குதல் உயர்மட்டத்தில் உள்ள குழுவொன்றின் தாக்குதல் போல தென்படுகின்றது என குறிப்பிட்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏனையகிறிஸ்தவ மதகுருமார்களை கண்காணிக்கின்றனர் என்னை பற்றியும் ஏனைய கிறிஸ்தவமதகுருமார்கள் குறித்தும் பல ஆவணங்களை கைவசம் வைத்திருக்கின்றனர் இது குறித்து நான் உறுதியாக சொல்கின்றேன் எங்கள் தொலைபேசிகள் பாதுகாப்பாக இல்லை நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாத நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.