கடன்தொடர்பில் சீனாவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடன் இலங்கை பகிர்ந்துகொண்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜப்பான் பிரான்ஸ் பரிஸ்கிளப் ஆகிய நாடுகளின் தலைமையிலான கடன்வழங்கும் நாடுகள் குழு இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டத்தைஎதிர்வரும் காலத்தில் முன்வைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் இந்தவருட இறுதிக்குள் இலங்கைக்கான 330 பில்லியன் நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அனுமதியளிக்கும் நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான கடன்உடன்படிக்கையின் விபரங்களை நாங்கள் தற்போது இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் உத்தியோக கடன்வழங்குநர்கள் இதற்கு பதிலளிப்பார்கள் நாங்கள் அதனை தொடர்ந்து முன்னோக்கி நகரலாம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.’