இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை (16) தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதனை பாராளுமன்றத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜெய் ஷாவின் தந்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.