யாழ்ப்பாணத்தில் 10 கிலோ 875 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 கிலோ 875 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.