ஓபாமாவின் ஒப்பந்தம் – ட்ரம்ப் நிர்வாகத்தினால் ரத்து

255 0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம், ட்ரம்ப் நிர்வாகத்தினால் ரத்து செய்யப்படவுள்ளது.

இதற்கான நிறைவேற்று உத்தரவில் ட்ரம்ப் இன்று கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படவுள்ள உலக அழிவு குறித்த நம்பிக்கை அற்றவராகவே டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார்.

எவ்வாறாயினும் இந்த தீர்மானத்துக்கு எதிராக சுற்றாடல் பாதுகாவலர்கள் வழக்கு தாக்கல் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.