தமிழர்களை அடக்க சிங்களவர் நினைக்ககூடாது – துரைராஜாசிங்கம்

419 0

indexசிங்களவர்கள் தமிழர்களை அடக்கிக்கொண்டு இந்த நாட்டிலே இன்பமாக வாழமுடிமென்று என  நினைக்க கூடாது என தமிழரசிக் கட்சியின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜாசிங்கம் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
தென்னகத்திலே இருக்கின்ற பெரும்பான்மை மக்களுடன் சகோதரர்களாக வாழ இருக்கின்றோம், வாழப்போகின்றோம், வாழ்வதற்கு தயாராகிவிட்டோம் என்கின்ற செய்தி அவர்களுக்கு கிடைக்கின்றபோது தான் இந்த நாட்டிலே இரண்டு சமூகங்களும் சமாதானமாக வாழ முடியும் அப்போதுதான் சமாதானம் நிலைக்கும்.
இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால் தமிழ்களின் கரமும் அங்கு பலப்படுத்தவேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தனிப்பட்ட ரீதியில் பெரும்பான்மை மக்களினால் மட்டும் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.